நடிகர் ரஜினிகாந்திற்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து


நடிகர் ரஜினிகாந்திற்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து
x
தினத்தந்தி 3 Nov 2019 11:00 AM IST (Updated: 3 Nov 2019 11:00 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினிகாந்திற்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

சர்வதேச திரைப்பட விழாவின் பொன் விழா ஆண்டையொட்டி, சினிமா துறைக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில், அவருக்கு சிறப்பு விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய திரைப்பட துறைக்கு கடந்த பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் செய்து வரும் தன்னிகரற்ற பங்களிப்பையும், சேவையையும் கவுரவித்து அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு, கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட பொன்விழா ஆண்டையொட்டி ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை அவருக்கு அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என கூறி உள்ளார்.

இந்நிலையில், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது டுவிட்டரில் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழ்நாடு திரை உலகத்திற்கு பெருமை அளிக்க கூடிய விஷயம் ஆகும், இந்த விருதுக்கு ரஜினிகாந்த் தகுதியானவர். புதுச்சேரி மக்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
1 More update

Next Story