எம்.பி.க்களின் வீடுகளில் முப்பரிமாண பெயர்ப்பலகை


எம்.பி.க்களின் வீடுகளில் முப்பரிமாண பெயர்ப்பலகை
x
தினத்தந்தி 4 Nov 2019 1:15 AM IST (Updated: 4 Nov 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

எம்.பி.க்களின் வீடுகளில் முப்பரிமாண பெயர்ப்பலகைகள் வைக்கப்பட உள்ளன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு (எம்.பி.க்கள்) டெல்லியில் அரசு சார்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் அவரவர் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் இந்த பெயர்கள் இரவில் தெரியவில்லை என பல எம்.பி.க்கள் அதிருப்தி வெளியிட்டு இருந்தனர்.

எனவே இரவிலும் தெரியும் வகையில் எம்.பி.க்களின் வீடுகளில் ஒளிரும் 3டி (முப்பரிமாணம்) பெயர்ப்பலகைகளை வைப்பதற்கு அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக மத்திய பொதுப்பணித்துறை சார்பில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த பணிகளுக்காக விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த புதிய முறைப்படி இரவிலும் பெயர் தெரியும் வகையில் பெரிய எழுத்துக்களுடன், எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டு, 3டி தொழில்நுட்பத்தில் பெயர்ப்பலகைகள் உருவாக்கப்படுகின்றன.

Next Story