பெண் தாசில்தார் அலுவலகத்திலேயே எரித்து கொலை - தீ வைத்தவர் உள்பட 3 பேர் காயம்
தெலுங்கானா மாநிலத்தில் அலுவலகத்திலேயே பெண் தாசில்தார் எரித்து கொலை செய்யப்பட்டார். தீ வைத்தவர், காப்பாற்ற முயன்றவர்கள் என 3 பேர் காயம் அடைந்தனர்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுர்மெட் என்ற இடத்தில் தாசில்தார் அலுவலகம் உள்ளது. இங்கு விஜயா ரெட்டி என்ற 35 வயதுள்ள பெண், தாசில்தாராக பணியாற்றி வந்தார். விஜயா நேற்று தனது அலுவலகத்தில் உள்ள அறையில் இருந்தார்.
மதியம் 1.30 மணி அளவில் அவரது அலுவலக அறைக்குள் வந்த சுரேஷ் என்பவர் திடீரென தாசில்தார் மீது தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். உடலில் தீப்பற்றி எரிந்ததால் விஜயா அலறினார். இந்த சத்தம் கேட்டு அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அவரது அறைக்கு ஓடி வந்தனர்.
அப்போது தாசில்தார் தீயில் எரிவதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலில் எரியும் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் சிறிது நேரத்திலேயே விஜயா அந்த இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். விஜயாவை காப்பாற்ற முயன்ற 2 அரசு ஊழியர்கள், தீவைத்த சுரேஷ் ஆகியோரும் தீக்காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் தீக்காயம் அடைந்த சுரேஷ் உள்பட 3 பேரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விஜயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். சுரேசுக்கு போலீஸ் காவலும் போடப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் அரசு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் வருவாய்த் துறை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்தும், நீதி கேட்டும் அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட கல்வி மந்திரி சபிதா இந்திரா ரெட்டி தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று பார்வையிட்டார். அவர் கூறும்போது, “இந்த சம்பவத்துக்கான காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஏதாவது குறை இருந்தால் மக்கள் உரிய அதிகாரிகளை அணுக வேண்டும். அதிகாரிகளும் மக்கள் நலனுக்காக பணிபுரிய வேண்டும். மக்கள் இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடக்கூடாது. இது சரியான வழி அல்ல” என்றார்.

சுரேஷ் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் சுரேஷுக்கு நிலப்பிரச்சினை இருந்ததாகவும், அதனாலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் தெரிகிறது. அவருக்கு 50 சதவீதத்துக்கு மேல் தீக்காயம் இருப்பதால் சிகிச்சை முடிந்தபின்னர் அவரிடம் மேலும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஆனாலும் அவர் ஏன் தாசில்தாருக்கு தீவைத்தார்? அவரை வேறு யாரும் தூண்டிவிட்டார்களா? அவரை அரசு அலுவலகத்துக்குள் செல்ல அனுமதித்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தெலுங்கானா மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் அரசு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் வருவாய்த் துறை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்தும், நீதி கேட்டும் அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட கல்வி மந்திரி சபிதா இந்திரா ரெட்டி தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று பார்வையிட்டார். அவர் கூறும்போது, “இந்த சம்பவத்துக்கான காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஏதாவது குறை இருந்தால் மக்கள் உரிய அதிகாரிகளை அணுக வேண்டும். அதிகாரிகளும் மக்கள் நலனுக்காக பணிபுரிய வேண்டும். மக்கள் இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடக்கூடாது. இது சரியான வழி அல்ல” என்றார்.
Related Tags :
Next Story