ஆஸ்திரேலியா, வியட்நாம் நாட்டு பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை


ஆஸ்திரேலியா, வியட்நாம்  நாட்டு பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
x
தினத்தந்தி 4 Nov 2019 3:38 PM GMT (Updated: 4 Nov 2019 3:38 PM GMT)

ஆஸ்திரேலியா, வியட்நாம் ஆகிய நாட்டைச்சேர்ந்த பிரதமர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

பாங்காங், 

இந்தியா–ஆசியான் உச்சி மாநாடு, கிழக்கு ஆசிய உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக பிரதமர் மோடி தாய்லாந்து சென்றிருந்தார். நேற்று ஆசியான் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில்,  இன்று கிழக்கு ஆசிய உச்சி மாநாடு நடந்தது. இதில் தென்சீனக்கடல் விவகாரம், வடகொரியா மற்றும் ரோஹிங்யா அகதி பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளுக்கு இடையே பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அந்தவகையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை  இன்று காலையில் சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் வியட்நாம் பிரதமரை சந்தித்து பேசினார். 


Next Story