மராட்டிய மாநிலத்தில் 40 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்து 5 பேர் பலி
மராட்டிய மாநிலத்தில் 40 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்த விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் காரட்டில் இருந்து மும்பை நோக்கி நேற்று முன்தினம் இரவு தனியாருக்கு சொந்தமான சொகுசு பஸ் புறப்பட்டது. அதில் 47 பயணிகள் இருந்தனர்.
நேற்று அதிகாலை ராய்காட் மாவட்டம், அம்ருதான்ஜன் பாலம் பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த 40 அடி பள்ளத்தில் பாய்ந்தது. அங்கு இருந்த மரங்களில் சிக்கி நின்றது. இதனால் அதில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர்.
கோபோலி போலீசார் அங்கு வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் 5 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த டிரைவர் உள்பட 40 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Tags :
Next Story