லோக் ஜன சக்தி கட்சி தலைவராக சிராக் பஸ்வான் நியமனம்


லோக் ஜன சக்தி கட்சி தலைவராக சிராக் பஸ்வான் நியமனம்
x
தினத்தந்தி 5 Nov 2019 5:17 PM GMT (Updated: 2019-11-05T22:47:10+05:30)

மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் லோக் ஜன சக்தி கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

பீகாரின் மாநில கட்சியான லோக் ஜன சக்தி கட்சி கடந்த 28-10-2000 அன்று துவங்கப்பட்டது. கட்சியின் தலைவராக அக்கட்சியை நிறுவியவரும் மத்திய மந்திரியுமான ராம் விலாஸ் பஸ்வான் செயல்பட்டுவந்தார்.

இந்நிலையில் கட்சியின் புதிய தலைவராக அவரது மகன் சிராக் பஸ்வான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடந்த கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் இப்பதவிக்கு அவர் ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார்.

பீகார் மாநிலத்தில் உள்ள ஜாமுய் (ரிசர்வ்) பாராளுமன்ற தொகுதியில் 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் போட்டியிட்டு வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story