சபரிமலை சீசன்: தென்மாநில அறநிலையத்துறை மந்திரிகள் ஆலோசனை - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்பு


சபரிமலை சீசன்: தென்மாநில அறநிலையத்துறை மந்திரிகள் ஆலோசனை - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்பு
x
தினத்தந்தி 6 Nov 2019 1:40 AM IST (Updated: 6 Nov 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலை சீசன் துவங்க உள்ள நிலையில், தென்மாநில அறநிலையத்துறை மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்றார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் வருகிற 16-ந் தேதி மண்டல, மகர விளக்கு சீசன் தொடங்குகிறது. இதையொட்டி திருவனந்தபுரத்தில் தென் மாநில அறநிலையத்துறை மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். இதில் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் அறநிலையத்துறை மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தமிழகம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஆணையர் பனீந்திர ரெட்டி, இணை ஆணையர் அன்புமணி ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தமிழகத்தில் இருந்து சபரிமலை வரும் பக்தர்களின் வாகனங்களை பம்பை வரை இயக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


Next Story