மராட்டிய அரசியல் சூழல் பற்றி கவலை தெரிவித்தார் சரத் பவார்; சஞ்சய் ராவத்


மராட்டிய அரசியல் சூழல் பற்றி கவலை தெரிவித்தார் சரத் பவார்; சஞ்சய் ராவத்
x
தினத்தந்தி 6 Nov 2019 11:48 AM IST (Updated: 6 Nov 2019 11:49 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தின் அரசியல் சூழ்நிலை பற்றி சரத் பவார் கவலை தெரிவித்துள்ளார் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.

புனே,

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 24ந்தேதி வெளியானது. இதில் ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 தொகுதிகளும் கிடைத்தன.

எனினும், மராட்டிய சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா, சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டு உள்ள மோதலால் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆவதற்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக அக்கட்சி பா.ஜனதாவை மிரட்டி வருகிறது.

இந்த அரசியல் சூழ்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் இன்று திடீரென சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராவத், சரத் பவார் நாட்டின் மற்றும் மராட்டியத்தின் மூத்த தலைவர் ஆவார்.  மராட்டியத்தின் அரசியல் சூழ்நிலை பற்றி அவர் கவலை தெரிவித்துள்ளார்.  நாங்கள் இருவரும் நீண்ட ஆலோசனை மேற்கொண்டோம் என்று கூறியுள்ளார்.

Next Story