பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி


பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 7 Nov 2019 5:04 PM IST (Updated: 7 Nov 2019 5:04 PM IST)
t-max-icont-min-icon

11-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பிரேசில் செல்கிறார்.

புதுடெல்லி, 

பிரிக்ஸ் நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பிரேசில் செல்கிறார். பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

உறுப்பு நாடுகளுடன் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்த உச்சி மாநாட்டில் தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று  வெளியுறவுத்துறை செயலாளர் (பொருளாதார உறவுகள்) டி.எஸ் திருமூர்த்தி தெரிவித்தார்.

Next Story