டெல்லியில் காற்று மாசு ; துணை முதல்-மந்திரி வீட்டு முன் பா.ஜனதா போராட்டம்


டெல்லியில் காற்று மாசு ; துணை முதல்-மந்திரி வீட்டு முன் பா.ஜனதா போராட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2019 4:45 AM IST (Updated: 8 Nov 2019 4:45 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் காற்று மாசடைவதை தடுக்க மாநில ஆம் ஆத்மி அரசு தவறியதாக கூறி பா.ஜனதா எம்.பி. விஜய் கோயல் தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

புதுடெல்லி, 

டெல்லியில் காற்று மாசடைவதை தடுக்க மாநில ஆம் ஆத்மி அரசு தவறியதற்காகவும், மாசடைய காரணமான விளைநிலங்களில் அறுவடைக்கு பின்னர் எஞ்சியவைகளை எரிப்பதற்கு பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக இருப்பதை கண்டித்தும் பா.ஜனதா எம்.பி. விஜய் கோயல் தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா வீட்டு முன்பு நடந்தது. அப்போது விஜய் கோயல் சைக்கிளில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு அங்கு வந்தார்.

விஜய்கோயல் கூறும்போது, “கெஜ்ரிவாலும் அவரது கட்சியினரும் இரட்டை வேடம் போடுகிறார்கள். ஒருபுறம் அறுவடைக்கு பின்னர் எஞ்சியதை எரிப்பது தான் காற்று மாசு ஏற்பட காரணம் என்று கூறுகிறார்கள். மற்றொருபுறம் பஞ்சாபில் அவர்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இதனை ஆதரிக்கிறார்கள்” என்றார்.

Next Story