அயோத்தி வழக்குதான் சுப்ரீம் கோர்ட்டின் 2-வது நீண்ட வழக்கு விசாரணை
அயோத்தி வழக்குதான் சுப்ரீம் கோர்ட்டின் 2-வது நீண்ட வழக்கு விசாரணையாக கருதப்படுகிறது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் 1973-ம் ஆண்டு கேசவானந்த் பார்தி வழக்கில் அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு குறித்து தொடர்ந்து 63 நாட்கள் விசாரணை நடைபெற்றது. இதுவே இன்றுவரை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற மிக நீண்ட வழக்கு விசாரணையாக உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி தொடங்கிய விசாரணை அக்டோபர் 16-ந் தேதி நிறைவுபெற்றது. முதலில் அக்டோபர் 18-ல் விசாரணை முடியும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் 17-ந் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால் 16-ந் தேதி நீதிபதிகள், ‘போதும், போதும்’ என்று கூறி விசாரணையை முடித்து வைத்தனர். நேற்று தீர்ப்பு வெளியிடப்பட்டது. 40 நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையே சுப்ரீம் கோர்ட்டின் 2-வது நீண்ட வழக்கு விசாரணையாக உள்ளது.
3-வது இடத்தில் ஆதார் திட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்த வழக்கு விசாரணை உள்ளது. இந்த விசாரணை 30 நாட்கள் நடைபெற்றது.

Related Tags :
Next Story