‘அயோத்தி வழக்கு தீர்ப்பு எங்களுக்கு மற்றொரு தீபாவளி’ - கரசேவையில் பலியானவர்களின் சகோதரி மகிழ்ச்சி


‘அயோத்தி வழக்கு தீர்ப்பு எங்களுக்கு மற்றொரு தீபாவளி’ - கரசேவையில் பலியானவர்களின் சகோதரி மகிழ்ச்சி
x
தினத்தந்தி 9 Nov 2019 9:23 PM GMT (Updated: 9 Nov 2019 9:23 PM GMT)

அயோத்தி வழக்கு தீர்ப்பு எங்களுக்கு மற்றொரு தீபாவளி என கரசேவையில் பலியானவர்களின் சகோதரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

அயோத்தி ராமஜென்மபூமியில் கடந்த 1990-ம் ஆண்டு கரசேவையில் நடந்த துப்பாக்கி சூட்டில் கொல்கத்தாவை சேர்ந்த சகோதரர்கள் ராம்கோத்தாரி (வயது 22), சரத் கோத்தாரி (20) ஆகியோர் பலியானார்கள்.

இவர்களின் சகோதரி பூர்ணிமா அயோத்தி தீர்ப்பு குறித்து கூறுகையில், ‘இந்த தீர்ப்பால் ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த தீர்ப்புக்காக 29 ஆண்டுகளாக காத்திருந்தோம். ராமர் கோவிலுக்காக இறந்த எனது சகோதரர்களின் ஆன்மா இனி சாந்தி அடையும். இது எங்களுக்கு மற்றொரு தீபாவளி, ஹோலி பண்டிகையாகும்’ என்று தெரிவித்தார்.


Next Story