"மனைவி வீட்டில் இல்லை தனியாக இருக்கிறேன்" மாணவியை இரவில் சமையல் செய்ய அழைத்த ஹாஸ்டல் வார்டன்


மனைவி வீட்டில் இல்லை தனியாக இருக்கிறேன் மாணவியை இரவில் சமையல் செய்ய அழைத்த ஹாஸ்டல் வார்டன்
x
தினத்தந்தி 15 Nov 2019 5:43 PM IST (Updated: 15 Nov 2019 7:09 PM IST)
t-max-icont-min-icon

மனைவி வீட்டில் இல்லை தனியாக இருக்கிறேன் என்று மாணவியை இரவில் சமையல் செய்ய அழைத்த ஹாஸ்டல் வார்டன் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட்,

உத்தரகாண்ட் கோவிந்த் பல்லப் பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவி ஒருவர் வார்டன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கூறி உள்ளார்.  அக்டோபர் 21ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட புகாரில், விடுதி வார்டனால் தான் துன்புறுத்தப்படுவதாக அந்த மாணவி கூறி உள்ளார்.  வீட்டில் எனது மனைவி இல்லை. தனது வீட்டிற்கு வந்து நள்ளிரவில் சமைக்கும்படி மாணவியை , வார்டன் கேட்டுக் கொண்டு உள்ளார்.

கோவிந்த் பல்லப் பந்த் பல்கலைக்கழக மாணவர் நலத்துறை டீன் டாக்டர் சலீல் திவாரி இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார். அக்டோபரில் நடைபெற்ற பல்கலைக்கழக ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் துணைவேந்தர் முன் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. ஆனால்  20 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து  மாணவி, வார்டன் அவருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளையும் ஆதாரமாக காட்டினார்.

ஆனால் வார்டன் கடமையை சரிவர செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில்  இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டு உள்ளார்.

Next Story