காற்று மாசு குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்த முக்கிய அதிகாரிகள்
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கூட்டு செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் காற்று மாசு குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளனர்.
புதுடெல்லி,
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற காற்று மாசு குறித்த கூட்டத்தில் சுற்றுச்சூழல், காடு மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கூட்டு செயலாளர் உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளனர்.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கூட்டு செயலாளர் இன்று உச்சநீதிமன்றத்திற்கு ஒரு முக்கியமான விஷயத்திற்காக செல்ல வேண்டி இருந்ததால் இந்த கூட்டத்தில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ தகவலின் படி டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர், டெல்லியின் மூன்று நகராட்சி ஆணையர்கள் மற்றும் கிழக்கு டெல்லியின் பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
மொத்தம் 29 பேர்களில் 4 பேர் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் இது குறித்து மக்களவை தலைவரிடம் முறையிடப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story