ஆம்னெஸ்டி தொண்டு நிறுவனத்தில் சி.பி.ஐ. அதிரடி சோதனை


ஆம்னெஸ்டி தொண்டு நிறுவனத்தில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
x
தினத்தந்தி 16 Nov 2019 1:08 AM IST (Updated: 16 Nov 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு, டெல்லியில் உள்ள ஆம்னெஸ்டி தொண்டு நிறுவனத்தின் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சி.பி.ஐ. சோதனை நடைபெற்றது.

பெங்களூரு,

ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா என்ற பெயரில் மனித உரிமைகளுக்கான தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் பெங்களூரு மற்றும் டெல்லி கிளை அலுவலகங்களில் நேற்று ஒரே நேரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று காலை 8-30 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது. பெங்களூரு கிளை அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் 6 பேர் சோதனை நடத்தி உள்ளனர்.

இந்த சோதனை குறித்து தொண்டு நிறுவனத்தின் சார்பில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “ஒவ்வொரு முறையும் இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து நாங்கள் குரல் எழுப்பும்போதெல்லாம் ஒருவகையான தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகிறோம். உலக அளவில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறோம். இந்திய மற்றும் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறோம். எங்கள் பணிகள் பாராட்டப்பட்டு உள்ளன.” என்று கூறப்பட்டு உள்ளது. அன்னிய செலாவணி முறைகேடு புகார் தொடர்பாக ஏற்கனவே ஒரு ஆண்டிற்கு முன்பு இந்த நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போதும் அதே முறைகேடு புகார் எதிரொலியாக சி.பி.ஐ. சோதனை நடைபெற்று உள்ளது.


Next Story