ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
ரபேல் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக கூறியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ராகுல் காந்திக்கு எதிராக மும்பையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி,
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தில் சந்தேகத்துக்கு இடமில்லை என சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் அறிவித்தது. மேலும் இந்த ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணை கோரிய மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் புகார் கூறிய காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை மத்திய அரசும், பா.ஜனதாவும் குறை கூறியுள்ளன. இந்த விவகாரத்தில் பொய் குற்றச்சாட்டு கூறியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பா.ஜனதாவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜனதாவினர் நேற்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் அந்த கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story