ராஜஸ்தான்: பஸ்-லாரி மோதி விபத்து; ராணுவ வீரர் ஒருவர் பலி - 11 பேர் படுகாயம்


ராஜஸ்தான்: பஸ்-லாரி மோதி விபத்து; ராணுவ வீரர் ஒருவர் பலி - 11 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 16 Nov 2019 5:22 PM GMT (Updated: 16 Nov 2019 5:22 PM GMT)

ராஜஸ்தானில் பஸ்-லாரி நேருக்குநேர் மோதிக் கொண்டதில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பர்மெர் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டு இருந்தது. நவி கி சாக்கி என்ற இடத்தில் சென்றபோது, ஆமதாபாத்தில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக லாரி மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் 2 வாகனங்களும் சேதம் அடைந்தன.

இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த கேரளாவைச் சேர்ந்த ராணுவ வீரர் வினாய் இப்ராகிம் (வயது 45) என்பவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஜோத்பூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 9 ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்து.

Next Story