மேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்காளதேசத்தினர் 9 பேர் கைது
மேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்காளதேசத்தினர் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் வங்காளதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அந்த நாட்டைச் சேர்ந்த பலர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர். இந்த நிலையில் முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு 24 பர்கானா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்காளதேசத்தைச் சேர்ந்த 9 பேரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர்.
மேலும், சட்டவிரோதமாக ஊடுருவியவர்களிடம் இருந்து 28 கால்நடைகளின் தலைகள், 499 பாட்டில்களில் இருந்த இந்தியாவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

Related Tags :
Next Story