கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் - ஒடிசா பல்கலைக்கழகம் இன்று வழங்குகிறது


கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் - ஒடிசா பல்கலைக்கழகம் இன்று வழங்குகிறது
x
தினத்தந்தி 19 Nov 2019 2:55 AM IST (Updated: 19 Nov 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

கமல்ஹாசனுக்கு ஒடிசா பல்கலைக்கழகம் இன்று டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.

புவனேஸ்வர்,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக ஒடிசா மாநிலத்தில் உள்ள செஞ்சுரியன் தொழில்நுட்ப மேலாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சினிமா, கலாசாரம் மற்றும் கலை சேவையை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒடிசாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) செஞ்சுரியன் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.


Next Story