கேதர்நாத் செல்லும் பக்தர்களுக்கு மசாஜ் சென்டர்கள்


கேதர்நாத் செல்லும் பக்தர்களுக்கு மசாஜ் சென்டர்கள்
x
தினத்தந்தி 20 Nov 2019 2:15 AM IST (Updated: 20 Nov 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

கேதர்நாத் செல்லும் பக்தர்களுக்கு மசாஜ் சென்டர்கள் அமைக்கப்பட உள்ளன.

டேராடூன்,

இமயமலையில் உள்ள கேதர்நாத்திற்கு ஆண்டுதோறும் திரளான பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்த வருட சீசனில் மட்டும் 10 லட்சம் பேர் தரிசனம் செய்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுண்டுவில் இருந்து கேதர்நாத்திற்கு சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் நடத்து சென்று தரிசனம் செய்கின்றனர். இதனால் அவர்கள் மிகுந்த சோர்வு அடைகின்றனர். இதற்காக அடுத்த சீசன் முதல் செல்லும் வழியில் 4 பகுதிகளில் 7 மசாஜ் சென்டர்கள் அமைக்கப்பட உள்ளதாக ருத்ரபயாக் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் அடுத்த ஆண்டு பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மசாஜ் சென்டர்கள் அமைப்பதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். பாதுகாப்பு கருதி கேதர்நாத்திற்கு குதிரை மற்றும் கோவேறு கழுதைகளில் செல்லும் பக்தர்கள், யாத்திரிகர்கள் மட்டுமின்றி அவைகளை ஓட்டிச்செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்”, என்றார்.

Next Story