ஜி.எஸ்.டி. வரி செலுத்த முடியாததால் தொழில் அதிபர் தற்கொலை
ஜி.எஸ்.டி. வரி செலுத்த முடியாததால் தொழில் அதிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
அவுரங்காபாத்,
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் வாலுஜ் தொழிற்பேட்டையில் விஷ்ணு ராம்பாவ் கலவானே (வயது 53) என்பவர் இரும்பு தொழிற்சாலை நடத்தி வந்தார். இந்தநிலையில் பந்தபூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் விஷ்ணு திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘ஜி.எஸ்.டி. வரியை செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என கூறப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story