சபரிமலையில் அய்யப்ப பக்தர் சாவு


சபரிமலையில் அய்யப்ப பக்தர் சாவு
x
தினத்தந்தி 21 Nov 2019 1:36 AM IST (Updated: 21 Nov 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலையில் அய்யப்ப பக்தர் ஒருவர் உயிரிழந்தார்.

சபரிமலை,

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அய்யப்பனை தரிசித்து வருகின்றனர்.

நேற்று மராட்டிய மாநிலம் மும்பையின் செம்பூர் பகுதியை சேர்ந்த பாலன் (வயது 76) என்பவர் அய்யப்பனை தரிசிப்பதற்காக சபரிமலை வந்தார். தரிசனம் முடிந்து கீழே இறங்கிய அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ‘டோலி’ மூலம் அவசர மருத்துவ சிகிச்சை மையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாலன் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


Next Story