மக்களவையில் சிட்பண்ட் திருத்த மசோதா நிறைவேறியது


மக்களவையில் சிட்பண்ட் திருத்த மசோதா நிறைவேறியது
x
தினத்தந்தி 20 Nov 2019 9:30 PM GMT (Updated: 20 Nov 2019 8:58 PM GMT)

மக்களவையில் சிட்பண்ட் திருத்த மசோதா உறுப்பினர்களின் பெரும்பாலான ஆதரவுடன் நேற்று நிறைவேறியது.

புதுடெல்லி,

சிட்பண்ட் முறைகேடுகளை தடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய மசோதா ஒன்றை உருவாக்கி உள்ளது. ‘சிட்பண்ட் (திருத்தம்) மசோதா 2019’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த மசோதா மீது நேற்று மக்களவையில் விவாதம் நடந்தது.

இந்த விவாதத்துக்கு நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாகூர் பதிலளிக்கையில், ‘சிட்பண்ட் திட்டங்களில் தங்கள் பணத்தை போடும் ஏழை மக்களின் நலன்களை காக்கும் நோக்கில் இந்த மசோதா உருவாக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வருகிற ஆண்டுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர் விழிப்புணர்வு திட்டங்களை மத்திய அரசு மேற்கொள்ளும். சட்டப்பூர்வ சிட்பண்ட்களுக்கும், போலி நிறுவனங்களுக்கும் இடையேயான வேறுபாடுகளை மக்களுக்கு எம்.பி.க்கள் எடுத்துரைக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

பின்னர் உறுப்பினர்களின் பெரும்பாலான ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியது.

முன்னதாக இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய பா.ஜனதா உறுப்பினர்கள், மசோதா தொடர்பாக மத்திய அரசை பாராட்டினர். எனினும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், இந்த மசோதாவை கொண்டு வர காலதாமதம் செய்தது ஏன்? என கேள்வி எழுப்பினார்.


Next Story