10ம் வகுப்பு வாரிய தேர்வு எழுதும் அசாமின் இளம் வயது சிறுவன்


10ம் வகுப்பு வாரிய தேர்வு எழுதும் அசாமின் இளம் வயது சிறுவன்
x
தினத்தந்தி 2 Dec 2019 12:06 PM IST (Updated: 2 Dec 2019 12:06 PM IST)
t-max-icont-min-icon

அசாமில் 10ம் வகுப்பு வாரிய தேர்வை ஐசக் பவுலாலுங்முவான் வைபேய் என்ற இளம் வயது சிறுவன் எழுதுகிறார்.

இம்பால்,

அசாமில் சுராசந்த்பூர் மாவட்டத்தில் கங்வாய் கிராமத்தில் ஐசக் பவுலாலுங்முவான் வைபேய் (வயது 12)  என்ற சிறுவன் வசித்து வருகிறார்.  இவரது பெற்றோரின் மூத்த மகனான ஐசக் மவுண்ட் ஆலிவ் பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.

கடந்த வருடம் ஐசக்கின் தந்தை கெங்கோலீன் வைபேய், தனது மகனை மெட்ரிக் தேர்வுகளை எழுத அனுமதி கேட்டு கல்வி துறைக்கு விண்ணப்பம் செய்துள்ளார்.

இதனை அடுத்து கல்வி துறை ஆணையாளர், ஐசக்கிற்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்.  அதன் முடிவில், ஐசக் மனதளவில் 17 வருடம் 5 மாதங்கள் வயது உடையவராக இருக்கிறார்.  அவரது ஐ.க்யூ. (நுண்ணறிவு எண்) 141 ஆக உள்ளது.  இது மிக உயர்ந்த அறிவாற்றல் மற்றும் வளர்ச்சிக்கான செயல்படுதலை கொண்டவர் என தெரிவிக்கின்றது.

இதனால், தேர்வில் பங்கேற்கும் வகையில் ஐசக்கின் வயதினை 15 ஆக மாற்றுவதற்கு அவரது தந்தையிடம், கல்வித்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டது. அதன்படி அவர் செய்துள்ளார்.

ஐசக்கின் தந்தை கூறும்பொழுது, எனது மகனுக்கு இந்த வாய்ப்பு வழங்கிய கல்வி துறைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.  மிக்க மகிழ்ச்சி.  கல்வி துறையினரின் இந்த திட்ட தொடக்கம், வருங்கால தலைமுறையினரிடம் அவர்களின் திறமைகள் மற்றும் தனித்தன்மைகள் ஆகியவற்றை பரிசோதனை செய்வதற்கு வழிவகுக்கும் என கூறினார்..

இதுபற்றி சிறுவன் ஐசக் கூறும்பொழுது, மகிழ்ச்சியும் பரவசமும் அடைந்துள்ளேன்.  சர் ஐசக் நியூட்டன் மீது எனக்கு ஆர்வம் உண்டு.  ஏனெனில், அவரை போலவே இருக்கிறேன் என நான் நினைப்பது உண்டு.  எங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு பெயரே உள்ளது என கூறியுள்ளார்.

Next Story