தேசிய செய்திகள்

வங்கி கணக்கில் எவ்வளவு வைத்திருந்தாலும் காப்பீட்டு தொகையாக ரூ.1 லட்சம் மட்டுமே கிடைக்கும் - அதிர்ச்சி தகவல் + "||" + Only up to Rs 1 lakh, not all money, insured in banks: RBI-owned subsidiary

வங்கி கணக்கில் எவ்வளவு வைத்திருந்தாலும் காப்பீட்டு தொகையாக ரூ.1 லட்சம் மட்டுமே கிடைக்கும் - அதிர்ச்சி தகவல்

வங்கி கணக்கில் எவ்வளவு வைத்திருந்தாலும் காப்பீட்டு தொகையாக ரூ.1 லட்சம் மட்டுமே கிடைக்கும் - அதிர்ச்சி தகவல்
வங்கி கணக்கில் எவ்வளவு வைத்திருந்தாலும் காப்பீட்டு தொகையாக ரூ.1 லட்சம் மட்டுமே கிடைக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,

ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகம் அனைத்து வணிக வங்கிகள், ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வெளிநாட்டு வங்கிகளின் இந்திய கிளைகள் ஆகியவற்றில் உள்ள வைப்புத்தொகையை காப்பீடு செய்துவருகிறது. இந்த கழகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், வங்கிகள் தோல்வியுற்றாலோ, கலைக்கப்பட்டாலோ எவ்வளவு காப்பீட்டு தொகை கிடைக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு அந்த கழகம் அளித்துள்ள பதில் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அத்தகைய வங்கிகளில் வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு, வைப்புத்தொகை போன்றவைகளில் எவ்வளவு தொகை வைத்திருந்தாலும் காப்பீட்டு தொகையாக ஒரு லட்சம் மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ளது. இந்த தொகையை உயர்த்த முடியுமா? என்று கேட்டதற்கு அதற்கு தேவையான தகவல் தங்களிடம் இல்லை என்றும் கூறியுள்ளது.