பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு


பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 4 Dec 2019 1:56 PM IST (Updated: 4 Dec 2019 1:56 PM IST)
t-max-icont-min-icon

தமிழக பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியை திமுக எம்.பி.க்கள் சந்தித்தனர்.

புதுடெல்லி,

திமுக எம்.பி.க்கள்  கனிமொழி, டி.ஆர். பாலு தலைமையில் இன்று பிரதமர் மோடியை  திடீர் என சந்தித்தனர். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, பிரதமர் மோடியிடம் அவர்கள் அளித்தனர். அந்த மனுவில், 

* நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு வேண்டும்

* மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் அரசியலமைப்பில் மாற்றம் வேண்டும்.

* முல்லைப்பெரியாறு, மேகதாது, தென்பெண்ணை போன்ற நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில், தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.

* சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்.

* எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

* தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

* தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைக்க வேண்டும் என்பது உள்பட 16 கோரிக்கைகள் அதில் இடம் பெற்று உள்ளன.

Next Story