ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்
ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 100 நாட்களுக்கும் மேலாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “சிதம்பரத்தை 106 நாட்கள் சிறையில் வைத்தது முற்றிலும் வஞ்சகம் மற்றும் பழிவாங்கும் செயலாகும். உச்சநீதிமன்றம், சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது மகிழ்ச்சியை தருகிறது. நியாயமான வழக்கு விசாரணையில், தன்னை குற்றமற்றவர் என்று சிதம்பரம் நிரூபிப்பார் என்று நான் 100 சதவீதம் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story