சிகிச்சைக்கு வந்த சிறுவனிடம் சிறுநீரகம் திருடிய டாக்டர்


சிகிச்சைக்கு வந்த சிறுவனிடம் சிறுநீரகம் திருடிய டாக்டர்
x
தினத்தந்தி 5 Dec 2019 1:40 AM IST (Updated: 5 Dec 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

சிகிச்சைக்கு வந்த சிறுவனிடம் இருந்து சிறுநீரகத்தை டாக்டர் ஒருவர் திருடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் ஷாகான்ஜ் பகுதியை சேர்ந்த அர்காஷ் என்ற சிறுவனின் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தன. இதனையடுத்து அவனை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அவரது தந்தை அனுமதித்தார். பிரேம் மோகன் மிஸ்ரா என்ற டாக்டர் சிறுவனுக்கு சிகிச்சை அளித்தார்.

ஒரு மாதமாக தீவிர சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனையடுத்து சிறுவனை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிறுவனை சோதனை செய்த டாக்டர்கள், சிறுவனின் ஒரு சிறுநீரகம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பிரேம் மோகன் மிஸ்ரா தனது மகனின் சிறுநீரகத்தை திருடி விட்டதாக சிறுவனின் தந்தை புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story