அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; உயிர் தப்பிய இந்திய விமான படை தளபதி
அமெரிக்காவில் பியர்ல் ஹார்பர் கப்பல் கட்டும் தளத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் இருந்து இந்திய விமான படை தளபதி உயிர் தப்பினார்.
புதுடெல்லி,
அமெரிக்காவின் ஹவாய் தீவில் பியர்ல் ஹார்பர் என்ற கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ளது. இங்குள்ள தெற்கு நுழைவுவாயில் வழியே மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். அவர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி தன்னிடம் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் 3 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இந்த சம்பவத்திற்கு பின் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தனது தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கடற்படை சீருடை அணிந்து இருந்து உள்ளார். எனினும், காயமடைந்தோரின் எண்ணிக்கை உயர கூடும் என ஹவாய் நியூஸ் நவ் தெரிவித்து உள்ளது.
இந்திய விமான படையின் தளபதி ஆர்.கே.எஸ். பதவுரியா மற்றும் அவரது குழுவினர் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபொழுது, அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள பியர்ல் ஹார்பர் ஹிக்காம் கடற்படை மற்றும் விமான படை கூட்டு தளத்தில் இருந்தனர். இந்திய விமான படை தளபதி உள்பட அவர்கள் அனைவரும் துப்பாக்கி சூட்டில் இருந்து உயிர் தப்பினர் என இந்திய விமான படை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story