தேசிய செய்திகள்

சிகிச்சைக்கு பணம் இல்லாததால் மனைவியை உயிருடன் புதைத்த தொழிலாளி + "||" + Man buries bedridden wife alive in Goa

சிகிச்சைக்கு பணம் இல்லாததால் மனைவியை உயிருடன் புதைத்த தொழிலாளி

சிகிச்சைக்கு பணம் இல்லாததால் மனைவியை உயிருடன் புதைத்த தொழிலாளி
சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தொழிலாளி ஒருவர், தனது மனைவியை உயிருடன் புதைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பனாஜி,

கோவா மாநிலம் வடக்கு கோவா பகுதியை சேர்ந்தவர் துக்காராம் (வயது 46) கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி தான்வி (44) நீண்டநாட்களாக நோய்வாய்ப்பட்டு இருந்தார். அவருக்கு அடிக்கடி மருத்துவம் செய்ய வேண்டியது இருந்தது. அதற்கு துக்காராமிடம் போதிய பணவசதி இல்லை. இதனால் மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார்.


அதன்படி, நர்விம் என்ற கிராமத்தில் உள்ள கால்வாய் அருகில் அவரது மனைவியை உயிருடன் புதைத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துக்காராமை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நீர்ப்பாசன கால்வாயின் அருகில் கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தில் தான்வியை அவர் உயிருடன் புதைத்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் தான்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தேனி, போடியில் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை பிரிவு
தேனி, போடியில் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை பிரிவு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு.
2. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கு சிகிச்சை பெற வந்தவர் ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு
புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக வந்த தந்தை, மகன் ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் காரில் அனுப்பிவைத்தனர்.
3. வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வந்த 34 பயணிகள், கள்ளிக்குடி சிகிச்சை மையத்தில் தீவிர கண்காணிப்பு
வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வந்த 34 பயணிகள், கள்ளிக்குடி சிகிச்சை மையத்தில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
4. ஏ.டி.எம். மையங்களில் பணம் இருப்பு இல்லை: யெஸ் வங்கி கிளைகளில் பணம் எடுக்க கூட்டம் அலைமோதல்
ஏ.டி.எம். மையங்களில் பணம் இருப்பு இல்லாததால், யெஸ் வங்கி கிளைகளில் பணம் எடுக்க கூட்டம் அலைமோதியது.