டெல்லியில் தீ விபத்து; 32 பேர் பலி
டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 32 பேர் பலியாகி உள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியில் மக்கள் நெருக்கடி அதிகம் நிறைந்த ராணி ஜான்சி சாலை பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளன.
இந்த நிலையில், இன்று அதிகாலை அந்த பகுதியில் உள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சென்றன. அதிகாலை வேளையில் நடந்த இந்த தீ விபத்தில் சிக்கி 32 பேர் இறந்துள்ளனர். 50 பேரை நாங்கள் மீட்டுள்ளோம். அவர்களில் பலர் புகையால் பாதிப்படைந்து உள்ளனர் என தலைமை தீயணைப்பு அதிகாரி அதுல் கார்க் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story