கரும்பு கட்டுகளை எரித்து லல்லு கட்சியினர் போராட்டம்


கரும்பு கட்டுகளை எரித்து லல்லு கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2019 2:26 AM IST (Updated: 10 Dec 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

கரும்பு கட்டுகளை எரித்து லல்லு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

முசாபர்நகர்,

உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகரில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியினர் கரும்பு கட்டுகளை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்தினார்கள். கரும்புக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலை போதுமானதாக இல்லை என்று கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது.

இதுகுறித்து மாவட்ட தலைவர் அஜித் ராதி கூறுகையில், “கரும்பு விலை தொடர்பான பாரதீய ஜனதா அரசின் முடிவு விவசாயிகளுக்கு எதிராகவும், சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு ஆதரவாகவும் இருக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

Next Story