2 மூத்த அதிகாரிகளை சுட்டுக் கொன்ற சி.ஆர்.பி.எப். வீரர்


2 மூத்த அதிகாரிகளை சுட்டுக் கொன்ற சி.ஆர்.பி.எப். வீரர்
x
தினத்தந்தி 10 Dec 2019 11:49 AM IST (Updated: 10 Dec 2019 11:49 AM IST)
t-max-icont-min-icon

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் 2 மூத்த அதிகாரிகளை சுட்டுக் கொன்றார்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள போகாரோ பகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்த 226 வது  படைபிரிவைச் சேர்ந்த தீபேந்தர் யாதவ் என்ற சி.ஆர்.பி.எப். வீரர் தனது மூத்த அதிகாரிகள் இருவர் மீது துப்பாக்கியால் சுட்டார். 

இதில் சாகுல் ஹர்சன் மற்றும் பூபியா ஆகிய இரு அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இன்னொரு வீரர் காயமடைந்தார்.

பணியில் ஈடுபட்டிருந்த பிற வீரர்கள் தீபேந்தரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். பின்னர் அவரையும், காயமடைந்த மற்றொரு வீரரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீபேந்தர் யாதவ் தற்போது ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story