ஆயுத சட்டத்திருத்த மசோதா - மாநிலங்களவையில் நிறைவேறியது
ஆயுத சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது.
புதுடெல்லி,
தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளைத் தயாரிப்பவா்கள், மற்றும் வைத்திருப்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில், ஆயுத சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட திருத்தத்தின்படி, தற்போது ஒருவர் 3 துப்பாக்கிகள் வரை வைத்துக்கொள்ளலாம் என்று இருப்பது 2 துப்பாக்கிகளாக குறைக்கப்படுகிறது.
முன்னதாக உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் மசோதாவை தாக்கல் செய்து பேசிய போது, “தேசிய பாதுகாப்புக்காக இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது. துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்பது சில இடங்களில் நடைபெற்று வருகிறது. இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று (திங்கட்கிழமை) மசோதா நிறைவேறியதை தொடர்ந்து, மாநிலங்களவையிலும் இன்று நிறைவேற்றப்பட்டது.

Related Tags :
Next Story