மனித மேம்பாடு குறியீட்டில் இந்தியா முன்னேற்றம்


மனித மேம்பாடு குறியீட்டில் இந்தியா முன்னேற்றம்
x
தினத்தந்தி 11 Dec 2019 3:44 AM IST (Updated: 11 Dec 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

மனித மேம்பாடு குறியீட்டில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது.

புதுடெல்லி,

ஒவ்வொரு நாட்டிலும் மனிதர்கள் வளர்ச்சியை ஒப்பீடு செய்து, ஐ.நா. மேம்பாட்டு திட்டம் ஆண்டுதோறும் பட்டியல் தயாரித்து வருகிறது. இதில், 189 நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்த பட்டியலில், கடந்த ஆண்டு 130-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு ஒரு இடம் முன்னேறி, 129-வது இடத்தை அடைந்துள்ளது.

இதற்கு கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா அடைந்த விரைவான முன்னேற்றம், வறுமையின் பிடியிலிருந்து 27 கோடி பேர் விடுவிக்கப்பட்டது, கல்வி, சுகாதார வசதி ஆகியவையே காரணம் என்று ஐ.நா. மேம்பாட்டு திட்டத்தின் இந்திய பிரதிநிதி ஷோகோ நோடா தெரிவித்தார்

Next Story