2019-20ம் நிதியாண்டில் ஜி.டி.பி. 5.1 % ஆக இருக்கும்; ஆசிய வளர்ச்சி வங்கி
இந்தியாவின் ஜி.டி.பி. 2019-20ம் நிதியாண்டில் 5.1 சதவீதம் ஆக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.
புதுடெல்லி,
ஆசிய வளர்ச்சி வங்கியானது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2019-20ம் ஆண்டில் 6.5 சதவீத வளர்ச்சி அடையும். அதற்கு அடுத்த ஆண்டு 7.2 சதவீதம் வளர்ச்சி காணும் என கடந்த செப்டம்பரில் கணிப்பு வெளியிட்டு இருந்தது.
கடந்த 2018ம் ஆண்டில், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தன. இதனால், நிதி பிரிவில் ஆபத்தினை தவிர்க்கும் சூழ்நிலை மற்றும் கடன் நெருக்கடி ஆகியவை அதிகரித்தது. இதனை முன்னிட்டு 2019-20 நிதியாண்டில் 5.1 சதவீதம் என்ற அளவில் நாட்டில் வளர்ச்சியானது இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்து உள்ளது.
தொடர்ந்து, வேலைவாய்ப்பு வளர்ச்சி மந்த நிலையால் நுகர்வு பாதிப்படைந்தது. குறைந்த விளைச்சலால் கிராமப்புற பாதிப்பு மேலும் மோசமடைந்துள்ளது என தனது கணிப்பில் தெரிவித்து உள்ளது.
அடுத்த நிதியாண்டில் வளர்ச்சியானது ஆதரவு கொள்கைகளால் 6.5 சதவீதத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story