தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம்: இந்திய அரசியல் சாசன வரலாற்றில் இன்று கருப்பு நாள் - சோனியா காந்தி கருத்து + "||" + Passing the Citizenship Amendment Bill: Today is a black day in the history of Indian Constitution - Sonia Gandhi comment

குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம்: இந்திய அரசியல் சாசன வரலாற்றில் இன்று கருப்பு நாள் - சோனியா காந்தி கருத்து

குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம்: இந்திய அரசியல் சாசன வரலாற்றில் இன்று கருப்பு நாள் - சோனியா காந்தி கருத்து
குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறிய இந்த நாள், இந்திய அரசியல் சாசன வரலாற்றில் கருப்பு நாள் என்று சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய இந்நாள் இந்திய அரசியல்சாசன வரலாற்றில் கருப்பு நாள். குறுகலான புத்தி உள்ளவர்களும், மதவாத அமைப்புகளும் நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜனதாவின் ஆபத்தான பிளவுபடுத்தும் மற்றும் பிரிவினையை உண்டாக்கும் செயல்களுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து உறுதியோடு போராடும்.


இந்த மசோதா நமது முன்னோர்கள் போராடிய இந்தியாவின் அடிப்படை கொள்கைகளுக்கே எதிரானது. ஒரு குழப்பமான, சிதைந்த மற்றும் பிளவுபட்ட இந்தியாவை உருவாக்குவதாக உள்ளது. மதம் தான் தேசத்தை உருவாக்குவதாக அமைந்துவிடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.