ரஜினிக்கு தமிழில் வாழ்த்து கூறிய ஹர்பஜன் சிங் சினிமா பேட்டையின் ‘லார்டு’ என்று புகழாரம்


ரஜினிக்கு தமிழில் வாழ்த்து கூறிய ஹர்பஜன் சிங்   சினிமா பேட்டையின் ‘லார்டு’ என்று புகழாரம்
x
தினத்தந்தி 12 Dec 2019 11:37 PM GMT (Updated: 2019-12-13T05:31:06+05:30)

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி, அவருக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்து தெரிவித்தார்.

சண்டிகார்,

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி, நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஒருமுறை கூட உங்கள் சிகரம் குறைந்ததே இல்லை. நீங்கள் தூக்கிப்போட்டு பிடிக்கும் சிகரெட் விழுந்ததே கிடையாது. ஆறில் இருந்து அறுபது வரை, உங்கள் வசீகரத்தில் மயங்கிய நாங்கள் எழுந்ததே இல்லை.

சினிமா பேட்டையின் லார்டு(கடவுள்) என்றுமே நீங்கள் தான் தலைவா. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பேட்ட திரைப்படம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் திரைப்படம். வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் அத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தை சுட்டிக்காட்டியே ஹர்பஜன், ’சினிமா பேட்டையின் லார்டு’ என பதிவிட்டுள்ளார்.Next Story