தேசிய செய்திகள்

ரேப் இன் இந்தியா என்று பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பெண் எம்பிக்கள் அமளி + "||" + Lok Sabha and Rajya Sabha adjourned till 12 pm after uproar over Rahul Gandhi's 'Rape in India' remark

ரேப் இன் இந்தியா என்று பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பெண் எம்பிக்கள் அமளி

ரேப் இன் இந்தியா என்று பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பெண் எம்பிக்கள் அமளி
ரேப் இன் இந்தியா என்று பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாரதீய ஜனதா பெண் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி

பாலியல் குற்றங்கள் தொடர்பாக விமர்சித்ததற்கு ராகுல்காந்திக்கு மக்களவையில் பாஜக பெண் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ராகுல்காந்தி பேசும் போது,  நரேந்திர மோடி 'மேக் இன் இந்தியா' என்று கூறியிருந்தார், ஆனால் இப்போதெல்லாம் நீங்கள் எங்கு பார்த்தாலும் ரேப் இன் இந்தியாவாக உள்ளது . உத்தரபிரதேசத்தில் நரேந்திர மோடியின் எம்.எல்.ஏ ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார், பின்னர் அவர் ஒரு விபத்தை சந்தித்தார், ஆனால் நரேந்திர மோடி அதுகுறித்து  ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 

மேக் இன் இந்தியா இல்லை, ரேப் இன் இந்தியா என ராகுல் பேசியதால்  சர்ச்சை எழுந்தது.  ரேப் இன் இந்தியா என்கிற வார்த்தையை பயன்படுத்தி பேசிய ராகுலுக்கு  பெண் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர்.

இது குறித்து பேசிய திமுக எம்பி கனிமொழி கூறியதாவது;-

பிரதமர் மோடி  'மேக் இன் இந்தியா' என்றார், அதை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் நாட்டில் என்ன நடக்கிறது? அதைத்தான் ராகுல் காந்தி சொல்ல நினைத்தார். துரதிர்ஷ்டவசமாக மேக் இன் இந்தியா நடப்பதில்லை. நாட்டில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். இது கவலை அளிக்கிறது  என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமாவளவனுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது
திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி நடத்தும் போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
2. துணிவிருந்தால் எனது அரசை கவிழ்த்து பாருங்கள்- பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்
பீகாருக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றால், பிற மாநில மக்கள் பணம் செலுத்த வேண்டுமா? எனவும் பாஜக தேர்தல் அறிக்கையை உத்தவ் தாக்கரே சாடினார்.
3. காங்.ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றால் ராகுல் காந்தி ஏன் அங்கு செல்வதில்லை? நிர்மலா சீதாராமன் கேள்வி
எந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவமும் அரசியலாக்கப்படக்கூடாது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
4. இலவச தடுப்பூசி வாக்குறுதி: பாஜக மீது சிவசேனா பாய்ச்சல்
பீகார் சட்டமன்ற தேர்தலை ஒட்டி நேற்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது.
5. பீகாரில் பா.ஜ.க. கூடுதல் இடங்களை வென்றால் முதல்-மந்திரி யார்? அமித்ஷா பரபரப்பு பேட்டி
பீகாரில் பா.ஜ.க. கூடுதல் இடங்களை வென்றால் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பது குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்தார்.