தேசிய செய்திகள்

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு: மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில் பேரணி + "||" + Kolkata: West Bengal Chief Minister Mamata Banerjee takes out a protest march against Citizenship Amendment Act and NRC

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு: மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில் பேரணி

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு: மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில் பேரணி
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் பேரணி நடைபெற்று வருகிறது.
கொல்கத்தா,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து குடியேறிய முஸ்லிம்  அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக குடியுரிமை திருத்த சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் இயற்றி உள்ளது.

இந்த சட்டத்தால் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என வடகிழக்கு மாநிலங்களில் அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த சட்டத்தை எதிர்த்து கடந்த சில நாட்களாக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டம் மேற்கு வங்காளத்திலும் பரவி உள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு வலுக்கும் அதே  சமயத்தில், வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.  சென்னை, டெல்லி உள்பட  நாடு முழுவதும்  மாணவர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து பிரமாண்ட பேரணி நடைபெற்று வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஏராளமான  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் பேரணியில் பங்கேற்று உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு போதிய உதவி கிடைக்கவில்லை: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை சமாளிக்க மத்திய அரசு போதிய உதவியை அளிக்க மறுப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
2. மே.வங்காளத்தில் வசிக்கும் அனைத்து வங்கதேசத்தவர்களும் இந்திய குடிமக்களே ; மம்தா பானர்ஜி
மே.வங்காளத்தில் வசிக்கும் அனைத்து வங்கதேசத்தவர்களும் இந்திய குடிமக்களே என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
3. முதல்-மந்திரி பதவியில் இருந்து மம்தா பானர்ஜியை நீக்ககோரும் மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
முதல்-மந்திரி பதவியில் இருந்து மம்தா பானர்ஜியை நீக்ககோரும் மனுவினை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
4. “எதற்காக நமது நாட்டை பாகிஸ்தானுடன் ஒப்பிடுகிறீர்கள்?” - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி
இந்தியா வளமான கலாசாரம், பாரம்பரியம் கொண்ட நாடாக இருக்கிறபோது, எதற்காக பாகிஸ்தானுடன் ஒப்பிடுகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.
5. அபிஜித்துக்கு நோபல் பரிசு, கங்குலிக்கு பி.சி.சி.ஐ. பதவி கிடைத்தது மேற்கு வங்காளத்திற்கு பெருமை; மம்தா பானர்ஜி
அபிஜித் பானர்ஜிக்கு நோபல் பரிசும், சவுரவ் கங்குலிக்கு பி.சி.சி.ஐ. தலைவர் பதவியும் கிடைத்துள்ளது மேற்கு வங்காளத்திற்கு பெருமை என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.