குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக வழக்கு


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக வழக்கு
x
தினத்தந்தி 17 Dec 2019 11:49 AM IST (Updated: 17 Dec 2019 11:49 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

புதுடெல்லி

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு வலுக்கும் அதே  சமயத்தில், வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.  சென்னை, டெல்லி உள்பட  நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டு உள்ளனர். இன்று மாநிலம் முழுவதும் திமுக இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில்  திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. 

ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

சுப்ரீம்கோர்ட்டில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்குகள் நாளை விசாரணைக்கு வருகிற நிலையில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story