குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் -மாயாவதி வலியுறுத்தல்

குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
லக்னோ,
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெறுகிறது. டெல்லி, சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் குடியுரிமைச் சட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாயாவதி கூறியதாவது:
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் சட்டத்துக்கு எதிராக இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சட்டத்தை அனுமதித்தால் எதிர்காலத்தில் எதிர்மறையான நிகழ்வுகளே ஏற்படும்.
இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். காங்கிரஸ் ஒரு காலத்தில் கொண்டு வந்த நெருக்கடி நிலை போன்ற சூழலை மத்திய அரசு உருவாக்கக் கூடாது.
பகுஜன் சமாஜ் கட்சி குடியரசு தலைவரை சந்திக்க நேரம் கோரியுள்ளது. உத்தரபிரதேச சட்டசபையில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காகவும் குரல் எழுப்புவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story