நேரு குறித்து சர்ச்சை கருத்து: நடிகை பயல் ரோஹத்கிக்கு ஜாமீன்


நேரு குறித்து சர்ச்சை கருத்து: நடிகை பயல் ரோஹத்கிக்கு ஜாமீன்
x
தினத்தந்தி 17 Dec 2019 11:47 AM GMT (Updated: 17 Dec 2019 11:47 AM GMT)

நேரு குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட நடிகை பயல் ரோஹத்கி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

போபால்,

நடிகை மற்றும் மாடலாக இருப்பவர் பயல் ரோஹத்கி. இவர் கடந்த செப்டம்பர் 21 அன்று, ஒரு வீடியோ பதிவை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி இருந்ததாக தெரிகிறது. இந்த வீடியோ வடமாநில சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

அதனையடுத்து, ராஜஸ்தானிலுள்ள பூண்டியைச் சேர்ந்த காங்கிரஸ்காரர் ஒருவர் அக்டோபர் 10 ஆம் தேதி இவர் மீது புகார் கொடுத்தார். அதனை ஏற்று பயல் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து 15-ம் தேதி கைது செய்யப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில், ஜாமீன் கேட்டு ஒரு மனுவை தாக்கல் செய்திருந்த அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. சுதந்திர போராட்ட வீரரும் முன்னாள் பிரதமருமான நேரு மற்றும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி குறித்து பயல் ரோஹத்கி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

Next Story