திரிபுராவில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாகும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் தகுதித்தேர்வு மூலம் நியமனம்

திரிபுராவில் தொடக்கப்பள்ளி தகுதித்தேர்வு மூலம் என்ஜினீயரிங் பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
அகர்தலா,
நாடு முழுவதும் லட்சக்கணக்கான என்ஜினீயரிங் பட்டதாரிகள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இவர்களை பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க பல்வேறு மாநிலங்கள் முன்வந்துள்ளன.
அந்தவகையில் திரிபுராவில் கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வை (டெட்) பிற பட்டதாரி தேர்வர்களுடன் இணைந்து ஏராளமான என்ஜினீயரிங் பட்டதாரிகளும் எழுதினர். இவர்களில் 103 பேர் வெற்றி பெற்று தற்போது ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். இதில் கான்பூர் ஐ.ஐ.டி.யில் பயின்ற என்ஜினீயரிங் பட்டதாரி ஒருவரும் அடங்குவார்.
இதில் ‘டெட்-1’ தேர்வில் வெற்றி பெற்ற 39 பேர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாகவும், ‘டெட்-2’ தேர்வில் வெற்றி பெற்ற 64 பேர் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களாவும் நியமிக்கப்பட உள்ளனர். திரிபுரா மாநில அரசின் விதிமுறைகளின்படி இவர்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
கல்வி உரிமை சட்டத்தின்படி பி.எட். முடிக்காதவர்களை ஆசிரியராக நியமிக்க முடியாது. ஆனால் திரிபுராவில் அத்தகைய தகுதி பெற்ற தேர்வர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story