நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம், இன்று இரவு 11.50 மணியுடன் நிறைவடைகிறது.
புதுடெல்லி,
பொது மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
2020 -ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த விவரங்களை தேசிய தேர்வுக் குழு (NTA) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு மார்ச் மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் இந்தத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப் பிப்பது www.nta.ac.in / www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் கடந்த டிச.2-ம் தேதி தொடங்கியது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31ம் தேதியுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், ஜனவரி 6ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதன்படி, இன்று இரவு 11.50 மணியுடன் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகசாம் நிறைவடைகிறது.
Related Tags :
Next Story