பெண் போலீஸ் அதிகாரியின் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ் சூப்பிரெண்டு


பெண் போலீஸ் அதிகாரியின் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ் சூப்பிரெண்டு
x
தினத்தந்தி 6 Jan 2020 9:30 AM GMT (Updated: 6 Jan 2020 9:30 AM GMT)

பெண் போலீஸ் அதிகாரியின் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ் சூப்பிரெண்டு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கவுகாத்தி

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவரும் நிலையில், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரலும் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐதராபாத் என்கவுண்டருக்கு பொதுமக்கள் மத்தியில் எழுந்த வரவேற்பே அதற்கு சாட்சி.

அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில்  மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டாக பணியாற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், சக பெண் போலீஸ் அதிகாரி ஒருவரின் 13 வயது மகளை பாலியல் சீண்டல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31 ந்தேதி ஐ.பி.எஸ் அதிகாரியின் இல்லத்தில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியின் போது, அவர் பாலியல் சீண்டல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பங்களாவின் அறைக்குள் சிறுமியை  பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. எனினும், அம்மாநில போலீசார் அந்த அதிகாரியின் பெயரை வெளியிடவில்லை.

மூத்த போலீஸ் அதிகாரியாக இருக்கும் சிறுமியின் தாய், தனது மகளுடன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிறுமியின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் போலீஸ் சூப்பிரெண்டு விசாரிக்கப்பட்டுள்ளாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய உயரதிகாரிகள் கடந்த 3-ம் தேதி அந்த ஐ.பி.எஸ் அதிகாரி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். போக்சோ மற்றும் 354-வது பிரிவு ஆகியற்றில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐ.பி.எஸ் அதிகாரியை தொடர்பு கொண்ட போது, அவர் ஊடகங்களிடம் பேச மறுத்துள்ளார். அவருக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், “குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. எல்லாமே பொய்யானது” என்று தெரிவித்துள்ளார்.

Next Story