மே.வங்காளத்தில் தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு


மே.வங்காளத்தில் தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Jan 2020 1:47 PM IST (Updated: 8 Jan 2020 1:47 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தா, 

மத்திய அரசு கொள்கைகளை எதிர்த்து இன்று நாடுதழுவிய வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதன்படி,  இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று  வருகின்றது. மேற்கு வங்கத்தில் ஹவுரா மற்றும் காஞ்சரபர பகுதியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் மேற்கு வங்காளத்தின் ஹரிதாய்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 4 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.  முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்,  தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story