அமெரிக்கா-ஈரான் பதற்றம் எதிரொலி: வளைகுடா பிராந்தியத்துக்கு இந்திய போர்க்கப்பல்கள் விரைந்தன


அமெரிக்கா-ஈரான் பதற்றம் எதிரொலி: வளைகுடா பிராந்தியத்துக்கு இந்திய போர்க்கப்பல்கள் விரைந்தன
x
தினத்தந்தி 8 Jan 2020 8:20 PM GMT (Updated: 2020-01-09T01:50:53+05:30)

அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய கடற்படை கப்பல்கள் வளைகுடா பிராந்தியத்துக்கு விரைந்தன.

புதுடெல்லி, 

அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய கடற்படை கப்பல்கள் வளைகுடா பிராந்தியத்துக்கு விரைந்தன. பின்னர் அந்த கப்பல்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டன. அந்த கப்பல்களில் போர் விமானங்களும் தயார் நிலையில் உள்ளன.

கடல் மார்க்கமாக நடைபெறும் இந்திய வர்த்தகம் மற்றும் இந்திய வர்த்தக கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், ஏதாவது அவசர சூழ்நிலை ஏற்பட்டால் உடனே பதிலடி கொடுக்கும் வகையிலும் இந்த கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், சூழ்நிலையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

Next Story