தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்: ஏ.டி.எம். சேவை பாதிப்பு


தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்: ஏ.டி.எம். சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 8 Jan 2020 10:55 PM GMT (Updated: 8 Jan 2020 10:55 PM GMT)

மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.

புதுடெல்லி, 

வங்கி ஊழியர்களும் பங்கேற்றதால் நாட்டின் பல பகுதிகளில் வங்கி சேவை முடங்கின. குறிப்பாக மராட்டியம், ராஜஸ்தான், ஒடிசா, பஞ்சாப், அரியானா, தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வங்கி சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

இதைப்போல ரிசர்வ் வங்கி ஊழியர்களும் இந்த போராட்டத்தில் குதித்ததால் ரிசர்வ் வங்கியின் நிதி பரிவர்த்தனைகளும் தேக்கமடைந்தன.

இவ்வாறு வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டதால் மக்கள் அவசரமாக பணம் எடுப்பதற்கு ஏ.டி.எம். மையங்களை முற்றுகையிட்டனர். இதனால் பிற்பகலுக்குள் பல ஏ.டி.எம்.களில் பணம் தீர்ந்து விட்டன. அவற்றில் மீண்டும் பணம் நிரப்பவும் ஊழியர்கள் இல்லாததால் ஏ.டி.எம். சேவைகள் பின்னர் முடங்கின.

இதனால் தங்கள் அத்தியாவசிய தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.


Next Story