100 ரூபாய்க்கு பதில் 500 ரூபாயாக கொட்டிய ‘ஏ.டி.எம்’ எந்திரம்


100 ரூபாய்க்கு பதில் 500 ரூபாயாக கொட்டிய ‘ஏ.டி.எம்’ எந்திரம்
x
தினத்தந்தி 11 Jan 2020 2:33 AM IST (Updated: 11 Jan 2020 2:33 AM IST)
t-max-icont-min-icon

100 ரூபாய்க்கு பதில் 500 ரூபாயாக ‘ஏ.டி.எம்’ எந்திரத்தில் கொட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மடிகேரி,

கர்நாடக மாநிலம், மடிகேரி கோகினூர் சாலையில் கனரா வங்கி ஏ.டி.எம் ஒன்று உள்ளது. இதில் சில தினங்களுக்கு முன்பு ஒருவர் பணம் எடுத்தார். அப்போது அவருக்கு 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் நோட்டு வந்தது. இந்த தகவல் அந்த பகுதி மக்களிடம் பரவியது. கூடுதல் பணம் கிடைக்கிறது என்பதால் ஏ.டி.எம் எந்திரம் முன்பு பலர் திரண்டனர். நீண்ட வரிசையில் நின்று தங்கள் கார்டுகளை பயன்படுத்தி பணத்தை எடுத்துச் சென்றனர்.

இந்த தகவல் கிடைத்து வங்கி அதிகாரிகள் உடனே அங்கு வந்து ஆய்வு நடத்தினர். அப்போது எந்திரத்தில் பணம் நிரப்பிய தனியார் நிறுவன ஊழியர்கள் ரூ.100 நோட்டுகள் நிரப்ப வேண்டிய இடத்தில் ரூ.500 நோட்டுகளை தவறுதலாக நிரப்பியதால் இந்த கோளாறு ஏற்பட்டதாக தெரியவந்தது.

வங்கி அதிகாரிகள் வருவதற்குள் அதில் இருந்த மொத்த பணம் ரூ.1.50 லட்சத்தையும் மக்கள் எடுத்து சென்றனர். பணம் எடுத்து சென்றவர்களின் விவரங்களை வங்கி அதிகாரிகள் போலீஸ் நிலையத்தில் புகாராக அளித்தனர். அவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story